மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 23 Oct 2021 11:26 PM IST (Updated: 23 Oct 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

திருச்சி, அக்.24-
திருச்சியில் 6-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
தடுப்பூசி முகாம்
திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் 6-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்கே.என்.நேரு தொடங்கி வைத்து பார்வையிட்டார். திருச்சி புறநகரில் 427 தடுப்பூசி முகாம்கள், மாநகர பகுதிகளிலில் 202 முகாம்கள் என மொத்தம் 629 முகாம்களிலில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ரூ.16 லட்சம் நலத்திட்ட உதவிகள்
இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் தசைச்சிதைவு நோய் மற்றும் பக்கவாதத்தால்பாதிக்கப்பட்ட6மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியும், 13 மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டரும், மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரங்களும், 2 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் என மொத்தம் 23 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சம்மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கே.என்.நேரு வழங்கினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் பழனியாண்டி, சவுந்தரபாண்டியன்,  மாவட்ட கலெக்டர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், மாவட்ட சமூக நல அலுவலா் தமீமுன்னிசா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பொன்மலைப்பட்டி
6-வது கட்ட மெகா தடுப்பூசி முகாமையொட்டி பொன்மலைப்பட்டி, அடைக்கல மாதா கோவில் தெரு கொட்டப்பட்டு, காந்தி தெரு, ஜீவா தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை வீடு வீடாக சென்றும், தெருக்களில் உள்ள கடைகள், நியாயவிலைக் கடைகளுக்குநேரடியாக  சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டன. இந்த பணியில் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் ஈடுபட்டனர்.
காட்டுப்புத்தூர்
காட்டுப்புத்தூர் மேற்கு அரசு தொடக்கப்பள்ளி மற்றும் கிழக்கு தொடக்கப் பள்ளி, மஞ்சமேடு மல்லன் கோவில், பேரூராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி முன்னிலையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 320-க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
பொன்னம்பட்டி
பொன்னம்பட்டி பேரூராட்சியில் நேற்று பூதநாயகி அம்மன் கோவில் திருமண மண்டபம் மற்றும் சந்தைப்பேட்டை ஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளியில் கொரானா தடுப்பூசி சிறப்பு மெகா முகாம் நடைபெற்றது.முகாமில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு குலுக்கள் முறையில் முதல் பரிசு கிரைண்டர், 2-ம் பரிசு மிக்சி, 3-ம் பரிசு குக்கர் 3 பேருக்கும், 4-ம் பரிசு வேட்டி 20 பேருக்கும், 5-ம் பரிசாக சேலை 20 பேருக்கும் வழங்கப்பட்டன.  இதில் பேரூராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story