காங்கேயம் முத்தூர் பகுதிகளில் 7,150 பேருக்கு கொரோனா தடுப்பூசி


காங்கேயம் முத்தூர் பகுதிகளில் 7,150 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 23 Oct 2021 11:35 PM IST (Updated: 23 Oct 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம், முத்தூர் பகுதிகளில் நேற்று 7,150 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

காங்கேயம்
காங்கேயம், முத்தூர் பகுதிகளில் நேற்று 7,150 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் கொரோனா அலையைகட்டுப்படுத்த பல்வேறு விழிப்புணர்வுகளும், தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் காங்கேயம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பாக கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று காங்கேயம் ஒன்றியம், ஆலாம்பாடி ஊராட்சி, கல்லேரி, மறவபாளையம், படியூர், அரசம்பாளையம், நத்தக்காடையூர், மருதுறை, பரஞ்சேர்வழி, வரப்பம்பாளையம், வீரணம்பாளையம், பொத்தியபாளையம், களிமேடு, காங்கேயம் நகரம் பழையகோட்டை சாலை, திருப்பூர் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளிலும். சாவடிப்பாளையம், நத்தக்காடையூர், பாப்பினி, சத்யாநகர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது.
7,150 பேருக்கு...
இதுபோல் சிவன்மலை, கஸ்பாபழையகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மினி கிளினிக்கிலும், 3 நடமாடும் மருத்துவ குழுக்கள், காங்கேயம் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அந்தவகையில் 6200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
முத்தூர்
முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் 6-வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் மருத்துவமனை வளாகம் உள்பட 10 இடங்களில் நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர், அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள், பணியாளர்கள், ஊராட்சி நிர்வாக பணியாளர்கள் மூலம் நகர, சுற்று வட்டார கிராம பொதுமக்கள் என மொத்தம் 950 பேருக்கு முதல் மற்றும்  2-வது தவணை கோவிஷீல்டு தடுப்பூசிஇலவசமாக போடப்பட்டது.

Next Story