பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு கிராம மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கிராம மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை
பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கிராம மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கலவகுண்டா அணையிலிருந்து சுமார் 4500 கன அடி திறக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் பொன்னை அணைக்கட்டில் இருந்து சுமார் 4,500 கன அடி நீர் வெளியேற வாய்ப்புள்ளது.
எனவே ராணிப்பேட்டை மாவட்டம் பாலாற்றின் கரையோரம் உள்ள கிராமங்களான மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், கொண்டகுப்பம், சீக்கராஜபுரம், நரசிங்கபுரம், லாலாப்பேட்டை, தெங்கால், காரை, திருமலைச்சேரி, பூண்டி, குடிமல்லூர், சாத்தம்பாக்கம், விஷாரம், ஆற்காடு, சக்கரமல்லூர், புதுப்பாடி ஆகிய கிராம மக்கள் தாழ்வான பகுதியில் இருந்து பதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும்.
பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம். மேலும் வேடிக்கை பார்ப்பதற்காக அதிகம் கூட்டம் வருவதையும் தவிர்க்க வேண்டும்.
இந்த தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story