மாவட்டத்தில் பரவலாக மழை
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அருப்புக்கோட்டை,
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர் சற்று நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது.
அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, ராமசாமிபுரம், ஆத்திபட்டி, காந்திநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் தாழ்வான சாலைகளில் மழைநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
அருப்புக்கோட்டை பகுதிகளில் கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு கதிர் விடும் நிலையில் உள்ளது. இ்ந்தநிலையில் இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்திகோவில், பிளவக்கல் அணை, கிழவன் கோவில், நெடுங்குளம், மகாராஜபுரம், தம்பிபட்டி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. வத்திராயிருப்பு பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கன மழையால் நீரோடைகளில் நீர் வரத்து வர தொடங்கியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளிலும் நீர்மட்டமும் சற்று உயர்ந்து வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வடபத்ர சயனர் கோவில் பகுதிகளில் மழை நீர் புகுந்தது. தளவாய்புரம், சேத்தூர் பகுதிகளிலும் மழை பெய்தது.
சிவகாசி
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் இங்கு பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதித்தது.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு திடீரென மழை பெய்ய தொடங்கியது. பலத்த இடியுடன் கூடிய மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. சிவகாசியில் உள்ள பல பள்ளிகள் நேற்று செயல்பட்டதால் மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய பெரும்பாலான மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
Related Tags :
Next Story