முருகன் கோவில்களில் கார்த்திகை சிறப்பு வழிபாடு
மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கார்த்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தளவாய்புரம்,
தேவதானம் நாகமலை முருகன் கோவிலில் நேற்று கார்த்திகை தினத்தையொட்டி சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் துரை ரத்தினகுமார், செயல் அலுவலர் மகேந்திரன் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.
அதேபோல வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன் குறிச்சியில் கார்த்திகையையொட்டி வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விஜயகரிசல்குளம் கிராமத்தில் உள்ள வழிவிடு பால முருகன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.
Related Tags :
Next Story