மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேக்கு கொரோனா
மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மும்பை,
மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ராஜ் தாக்கரேவுக்கு பாதிப்பு
மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவா் ராஜ் தாக்கரே சமீபத்தில் நாசிக், புனே, தானே உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் அங்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதேபோல அடுத்த ஆண்டு பல்வேறு மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளதால், மும்பையிலும் மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
இந்தநிலையில் ராஜ்தாக்கரேக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. பரிசோதனையில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாய்க்கும் கொரோனா
இதேபோல ராஜ் தாக்கரேவின் தாய் குந்தா தாக்கரேவுக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இருவருக்கும் லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், 2 பேரும் தாதரில் உள்ள அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.
Related Tags :
Next Story