சாலையோரம் குவிந்து கிடக்கும் நெல்மணிகள்


சாலையோரம் குவிந்து கிடக்கும் நெல்மணிகள்
x
தினத்தந்தி 24 Oct 2021 2:11 AM IST (Updated: 24 Oct 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு பகுதியில் சாலை ஓரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக குவிந்து கிடக்கும் நெல்மணிகளை விரைவாக கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரத்தநாடு:
ஒரத்தநாடு பகுதியில் சாலை ஓரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக குவிந்து கிடக்கும் நெல்மணிகளை விரைவாக கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
சாலை ஓரங்களில் நெல் குவியல்கள்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை விற்பனை செய்வதற்காக விவசாயிகள், சாலை ஓரங்களில் நீண்ட தூரத்திற்கு குவியல்- குவியலாக  குவித்து வைத்துள்ளனர். குறிப்பாக பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் சாலையில் உள்ள தெலுங்கன்குடிக்காடு, புதூர் உள்ளிட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எதிரே சாலை ஓரங்களில் அறுவடை செய்த நெல்மணிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. சாலை ஓரங்களில்  நெல்மணிகள் கொட்டி குவியல்-குவியலாக வைக்கப்பட்டுள்ளதால் அந்த வழியே போக்குவரத்திற்கு  இடையூறு ஏற்படுகிறது.
விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும்
இதுகுறித்து தெலுங்கன்குடிக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில்,
நெல் அறுவடை முடிந்ததும் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்து, அந்த நெல்லை விற்பனை செய்வதற்கு கிட்டத்தட்ட 20 தினங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. தற்போது மழை பெய்வதால் நெல் மழையில் நனைந்து சேதமடைகிறது. எனவே நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 
தெலுங்கன்குடிக்காடு, புதூர் உள்ளிட்ட சில ஊர்களில் கூடுதல் பணியாளர்கள் மற்றும் வாகனங்களை கொண்டு விரைவாக நெல்லை கொள்முதல் செய்து குடோனுக்கு எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,  இரு தினங்களில் சாலை ஓரங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்கள் அனைத்து கொள்முதல் செய்யப்படும் என்று நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் தெரிவித்தனர்.

Next Story