தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
சிமெண்டு சிலாப் அகற்றம்
நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலம் அருகே ஒரு விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு சிமெண்டு சிலாப்பு வைக்கப்பட்டு இருந்தது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபற்றிய படமும், செய்தியும் ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. அதைத்தொடர்ந்து சிமெண்டு சிலாப்பு அகற்றப்பட்டது. அதற்கு நடவடிக்கை எடுத்தவர்களுக்கும், ‘தினத்தந்தி’-க்கும் பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.
சாலை அமைக்க வேண்டும்
தெள்ளாந்தி ஊராட்சி முடங்கன் விளை பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு செல்லும் சாலை சமீபத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது. இதனால் இறந்தவர் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சுடுகாட்டுக்கு செல்லும் சாலையை உடனே சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரஜினிகாந்த், முடங்கன்விளை.
மூட வேண்டிய பள்ளம்
நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலையில் இருந்து நாகராஜா கோவிலுக்கு செல்லும் குறுக்கு சாலை சந்திப்பில் பெரிய பள்ளம் உள்ளது. மழை நீர் தேங்கியிருக்கும் போது, இந்த பள்ளம் தெரியாததால், வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி சேதம் அடைந்து உள்ளன. இந்த பகுதியை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழரசு, ஆரல்வாய்மொழி.
செயல் படாத படிப்பகம்
திருவட்டார் ஒன்றியம் அயக்கோடு ஊராட்சி மாத்தூர் மில்லினியம் நகரில் ஒரு படிப்பகம் உள்ளது. அது செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. அந்த படிப்பகம் திறந்து செயல்பட்டால், ஊரில் உள்ளவர்கள் பயன் பெற வசதியாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாமுவேல், மாத்தூர்.
அடிப்படை வசதி வேண்டும்
கணியாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட புளியடி செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அவர்கள் உரிய அடிப்படை வசதி இல்லாமல் உள்ளனர். எனவே சாலையை சீரமைத்து அந்த பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சர்ச்சில் மார்ட்டின், கணியாகுளம்.
விபத்து அபாயம்
நெய்யூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கோமான்விளை கிராமத்தில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் அந்த சாலை வழியாக நடந்து செல்லவோ, வாகனத்தில் செல்லவோ முடியாத நிலை இருந்து வருகிறது. அதையும் மீறி செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜே.பிரின்சி, கோமான்விளை.
Related Tags :
Next Story