வள்ளியூரில் போலீஸ் சார்பில் நூலகம் திறப்பு
வள்ளியூரில் போலீஸ் சார்பில் நூலகம் திறக்கப்பட்டு உள்ளது.
வள்ளியூர்:
வள்ளியூர் போலீஸ் நிலையம் சார்பில் புதிய பஸ் நிலையம் புறக்காவல் நிலையம் அருகே பொதுமக்கள் ஒத்துழைப்புடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது முயற்சியில் போலீசார் நமது நூலகம் அமைத்து உள்ளனர். பொதுமக்களிடம் புத்தக உண்டியல் மூலம் புத்தகங்களை நன்கொடையாக பெற்று இந்த நூலகம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. வள்ளியூர் உதவி சூப்பிரண்டு சமயசிங் மீனா தலைமை தாங்கினார். வள்ளியூர் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் ரவிகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நமது நூலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். தலைமை காவலர் வசந்தி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சமுகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் லாரன்ஸ் மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது நன்றி கூறினார். தென் மாவட்டத்தில் முதல்முறையாக போலீசார், பொதுமக்கள் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நூலகம் அமைத்திருப்பது வள்ளியூரில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story