அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளுக்கு படுக்கைகள் இல்லாத அவலநிலை


அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளுக்கு படுக்கைகள் இல்லாத அவலநிலை
x
தினத்தந்தி 24 Oct 2021 3:04 AM IST (Updated: 24 Oct 2021 3:04 AM IST)
t-max-icont-min-icon

படுக்கை பற்றாக்குறை காரணமாக சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண்கள் தரையில் படுத்திருக்கும் அவல நிலை உள்ளது.

கொள்ளேகால்: படுக்கை பற்றாக்குறை காரணமாக சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண்கள் தரையில் படுத்திருக்கும் அவல நிலை உள்ளது. 

சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரி

தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண்கள் தரையில் படுத்திருக்கும் அவல நிலை உள்ளது. இதுபற்றிய தகவல் பின்வருமாறு:-

சாம்ராஜ்நகர் டவுனில் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். ஆனால் சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள்.
 
தரையில் படுக்கும் கர்ப்பிணிகள்

சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் மகபேறு பிரிவுக்கு 60 படுக்கைகள் உள்ளன. இந்த ஆஸ்பத்திரியில் ஒரு நாளைக்கு 20 பிரசவங்கள் நடக்கிறது. இதனால் சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் மகபேறு பிரிவில் படுக்கை பற்றாக்குறை நிலவுகிறது. அரசு ஆஸ்பத்திரிக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டாலும் பிரசவ வார்டுக்கு கூடுதல் படுக்கைகள் ஒதுக்கப்படவில்லை. 

இதன்காரணமாக சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண்கள் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். மகபேறு பிரிவில் உள்ள வராண்டா, மற்றும் படுக்கை அருகே கர்ப்பிணிகள் படுக்க வைக்கப்பட்டுள்ள அவல நிலை காணப்படுகிறது. 

கோரிக்கை

குழந்தை பிறந்தாலும் தாயும், சேயும் தரையில் படுக்க வைக்கப்படுகிறார்கள். இதனால் குழந்தைகள் நோய்வாய்பட அபாயம் நிலவுகிறது. மேலும் பிறந்த குழந்தைகள் திருட்டு போகவும் வாய்ப்பு உள்ளது. இதனால் சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் மகபேறு பிரிவில் படுக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story