மைசூரு சாமுண்டி மலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மந்திரி எஸ்.டி.சோமசேகர் நேரில் ஆய்வு


மைசூரு சாமுண்டி மலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மந்திரி எஸ்.டி.சோமசேகர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 24 Oct 2021 3:04 AM IST (Updated: 24 Oct 2021 3:04 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு சாமுண்டி மலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மந்திரி எஸ்.டி.சோமசேகர் நேரில் ஆய்வு செய்தார்.

மைசூரு: மைசூரு சாமுண்டி மலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மந்திரி எஸ்.டி.சோமசேகர் நேரில் ஆய்வு செய்தார். 

நிலச்சரிவு

மைசூருவில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக சாமுண்டி மலைப்பாதையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக அந்தப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டது. 

இதையடுத்து சாமுண்டி மலையில் ஏற்பட்ட நிலச்சரிவை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மணல் மூட்டைகளை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் அடுக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 

மந்திரி எஸ்.டி.சோமசேகர் ஆய்வு

இந்த நிலையில் சாமுண்டி மலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை நேற்று மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் நேரில் ஆய்வு செய்தார். அவருடன் ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை துறை அதிகாரிகள், கலெக்டர் பகாதி கவுதம் ஆகியோரும் உடன் இருந்தனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்ட அவர், உடனடியாக அதனை சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சாமுண்டி மலையில் ஏற்பட்ட நிலச்சரிவு இன்னும் ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும். அதன்பிறகு சாமுண்டி மலையில் போக்குவரத்து தொடங்கப்படும். இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.

Next Story