சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது
சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் மணக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் ராதாகிருஷ்ணன்(வயது 21). டிரைவரான இவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக, அந்த சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் ராதாகிருஷ்ணன் மீது இன்ஸ்பெக்டர் சுமதி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.
இந்நிலையில் இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமிகளை பலாத்காரம் செய்தவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்து வருகிறது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அன்புடனும், அரவணைப்புடன், பாதுகாப்புடனும் வைத்திருக்க வேண்டும். பல்வேறு கிராமங்களில் போலீசார் மூலம் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது விழிப்புணர்வுக்கு மட்டுமல்ல குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும்தான் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story