ஏரியில் தவறி விழுந்து முதியவர் பலி


ஏரியில் தவறி விழுந்து முதியவர் பலி
x
தினத்தந்தி 24 Oct 2021 3:06 AM IST (Updated: 24 Oct 2021 3:06 AM IST)
t-max-icont-min-icon

ஏரியில் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்தார்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் தெற்கு முதலியார் தெருவை சேர்ந்தவர் சங்கர்(வயது 85). இவர் இயற்கை உபாதை கழித்துவிட்டு அதே பகுதியில் உள்ள கேணிக்கரை திருக்குளத்தில் கால் கழுவ இறங்கியபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து ஏரியில் மூழ்கி இறந்தார். இதையறியாமல் அவரது உறவினர்கள் நேற்று முன் தினம் இரவு பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை ஏரிக்கு வந்தவர்கள், தண்ணீரில் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story