பெரம்பலூரில் இருந்து வாக்குப்பதிவு சரிபார்க்கும் எந்திரங்கள் லாரியில் அனுப்பி வைப்பு


பெரம்பலூரில் இருந்து வாக்குப்பதிவு சரிபார்க்கும் எந்திரங்கள் லாரியில் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 24 Oct 2021 3:09 AM IST (Updated: 24 Oct 2021 3:09 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் இருந்து வாக்குப்பதிவு சரிபார்க்கும் எந்திரங்கள் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டன.

பெரம்பலூர்:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பயிற்சி மற்றும் மாதிரி வாக்குப்பதிவு பயன்பாட்டிற்கான பயன்படுத்தப்பட்டு வந்த 270 வாக்குப்பதிவினை சரி பார்க்கும் எந்திரங்கள் உத்தரபிரதேச மாநிலம் சீத்தாப்பூர் மாவட்டத்திற்கு சட்டமன்ற தேர்தல் பயன்பாட்டிற்காக நேற்று முன்தினம் கண்டெய்னர் லாரியில் ஏற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக வாக்குப்பதிவு சரி பார்க்கும் எந்திரங்களை லாரிகளில் ஏற்றும்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர். மேலும் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் 240 கட்டுப்பாட்டு கருவிகள் இன்னும் சில நாட்களில் உத்தரபிரதேச மாநிலத்தில் மற்றொரு மாவட்டத்திற்கு அனுப்பப்படவுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story