சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை ேபாக்சோ கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பனையங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரேசன் (வயது 32). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம் விசாரணை நடத்தி, கதிரேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தார்.
பின்னர் கதிரேசன் மீது நெல்லை மாவட்ட போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட கதிரேசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜெபஜீவராஜா ஆஜரானார்.
Related Tags :
Next Story