உடன்குடி வட்டாரத்தில் முருங்கை சாகுபடி தீவிரம்
உடன்குடி வட்டாரத்தில் முருங்கை சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதியில் முருங்கை சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முருங்கை சாகுபடி
உடன்குடி வட்டார பகுதியில் பருவ மழை பெய்யாவிட்டாலும், அவ்வப்போது சாரல்மழை பெய்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் குறைந்த காலத்தில் அதிக வருமானம் பெறுவதற்கு முருங்கை சாகுபடியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
செம்மணல் தேரி பகுதியில் முருங்கை நன்றாக வளரும் என்ற நம்பிக்கையிலும், ஒரு கிலோ எடையுள்ள முருங்கைக்காய் ரூ. 40 முதல் ரூ.50 வரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் குறைந்த அளவு நீர் பாய்ச்சினால் முருங்கை நன்றாக வளரும்.
குறைந்த செலவில்...
சொட்டு நீர் பாசனம் அல்லது வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை தண்ணீர் பாய்ச்சினால் நன்றாக வளருகிறது. கால்வாய் பாசனமோ, குளத்தது பாசனமோ இல்லாத உடன்குடி பகுதியில் கிணற்று நீர் பாசனத்தை மட்டும் நம்பி விவசாயம் செய்வதற்கு முருங்கை மிக ஏற்றது. குறைந்த செலவில் அதிக வருமானம் பெறுவதற்கும் மற்ற விவசாய பயிர்களை விட முருங்கை சாகுபடியே செலவு குறைவு என்பதால் முருங்கை விவசாயம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story