தொடர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - மாவட்ட கலெக்டர் நடவடிக்கை
கும்மிடிப்பூண்டி அருகே தொடர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருவள்ளூர்,
கும்மிடிப்பூண்டி அடுத்த துராப்பள்ளம் கிராமம் பெரிய ஒபுளாபுரம் பகுதியை சேர்ந்த பொட்டு மணி என்ற மணிகண்டன் (வயது 22) என்பவரை கும்மிடிப்பூண்டி போலீசார் கடந்த மாதம் கஞ்சா கடத்தி வந்த போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
மேலும் போலீசார் விசாரணையில், கைது செய்யப்பட்ட மணிகண்டன் ஏற்கனவே 3 முறை கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் தொடர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வரும் மணிகண்டனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு பரிந்துரை செய்தார்.
இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் மணிகண்டனை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story