தூத்துக்குடியில் ஆன்லைன் மூலம் இளம்பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் மோசடி
தூத்துக்குடியில் வேலை வாங்கி கொடுத்துள்ளதாக கூறி ஆன்லைன் மூலம் இளம்பெண்ணிடம் ரூ.60ஆயிரம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வேலை வாங்கி கொடுத்துள்ளதாக கூறி இளம்பெண்ணிடம் ஆன்லைன் மூலம் ரூ.60 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
செல்போனில் அழைப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அய்யநேரியை சேர்ந்தவர் அபிநயா (வயது 20). இவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்து உள்ளது. அதில் பேசியவர், அபிநயாவுக்கு பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை கிடைத்து இருப்பதாகவும், அந்த வேலையை பெற்றுக் கொடுப்பதற்காக ஆன்லைன் மூலம் ரூ.60 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார். இதனை நம்பிய அபிநயா, ஆன்லைனில் ரூ.60 ஆயிரம் பணத்தை செலுத்தி உள்ளார். ஆனால் அவருக்கு வேலை வழங்கப்படவில்லை.
மர்மநபருக்கு வலைவீச்சு
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அபிநயா தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்கு பதிவு செய்து மோசடி செய்த மர்மநபரை வலைவீசி தேடிவருகிறார்.
Related Tags :
Next Story