தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை


தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 24 Oct 2021 5:20 PM IST (Updated: 24 Oct 2021 5:20 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று விடிய, விடிய போலீசார் சோதனை நடத்தி 1773 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் விடிய, விடிய விடுதிகளிலும், வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர். அவர்கள் மாவட்டத்தில் உள்ள 79 தங்கும் விடுதிகள் சோதனையிட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஏ.டி.எம் மையங்கள், நகைக்கடைகள் உட்பட 347 முக்கிய இடங்கள் கண்காணிக்கப்பட்டன. மேலும் வாகன சோதனையில் 2 ஆயிரத்து 442 வாகனங்கள் சோதனையிடப்பட்டு மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக 1773 வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டன.
நடவடிக்கை
இதே போன்று பழைய திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 57 பேர் மற்றும் பழைய கொலை வழக்கு குற்றவாளிகள் 84 பேரின் வீடுகளுக்குச் சென்று, அவர்களின் தற்போதைய இருப்பிடம் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் தணிக்கை செய்ய்பட்டன. இது தவிர 27 ரவுடிகள் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 107, 109 மற்றும் 110 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும இது போன்ற கண்காணிப்பு பணி தொடர்ந்து நடைபெறும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.


Next Story