தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு நேரடி பயிற்சி வகுப்பு
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு நேரடி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் பேச்சியம்மாள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் தகுதி வாய்ந்த ஆசிரியர்களால் நடத்தப்படுகிறது.
இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு எவ்வித கட்டணமும் கிடையாது. மேலும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தினசரி காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை போட்டித் தேர்வுக்கான அனைத்து புத்தகங்களையும் இலவசமாக படித்து பயன்பெறலாம். எனவே அரசு வேலை தேடும் இளைஞர்கள் மேற்படி பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story