ஓட்டப்பிடாரம் அருகே மகனுக்கு திருமணமாகாத விரக்தியில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை


ஓட்டப்பிடாரம் அருகே மகனுக்கு திருமணமாகாத விரக்தியில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 24 Oct 2021 6:42 PM IST (Updated: 24 Oct 2021 6:42 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே மகனுக்கு திருமணமாகாத விரக்தியில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மகனுக்கு திருமணமாகாததால் விரக்தி
ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டி சிங்கத்தாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது 66). இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு சிவசுப்பிரமணியன் என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கோயம்புத்தூரில் குடும்பத்தினருடன் குடியிருந்து வருகிறார். 
மகனுக்கு 35 வயது ஆகிவிட்ட நிலையில் திருமணத்திற்கு பெண் தேடிவந்துள்ளனர். ஆனால் பல இடங்களில் பார்த்தும் மகனுக்கு பெண் கிடைக்கவில்லை என்று விரதியில் சுப்பையா இருந்து வந்துள்ளார். இதனால் மனைவி உறவினரை பார்க்க தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். 
மயங்கி கிடந்தார்
இந்த நிலையில் நேற்று முந்தினம் அதிகாலையில் சுப்பையா வீட்டில் இருந்து டீ குடிக்க கடைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் தேடியுள்ளனர். அப்போது ஊருக்கு கிழக்கேயுள்ள சுடுகாட்டில் பூச்சிகொல்லி மருந்து குடித்த நிலையில் சுப்பையா மயங்கி கிடந்து உள்ளார். 
ஆஸ்பத்திரியில் சாவு
இதுகுறித்து இப்பகுதி மக்களும், உறவினர்களும் புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுப்பையாவை மீட்டு பாளையங்கோட்டை  ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு அவரை தூக்கி சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பையா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story