தூத்துக்குடியில் அமைப்புசாரா தொழிலாளர்கள் செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தபால் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு


தூத்துக்குடியில் அமைப்புசாரா தொழிலாளர்கள் செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தபால் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு
x
தினத்தந்தி 24 Oct 2021 6:55 PM IST (Updated: 24 Oct 2021 6:55 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அமைப்புசாரா தொழிலாளர்கள் செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தபால் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பளர் பொன்னையா தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் அமைப்புசாரா தொழிலாளர்கள் செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தபால் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பளர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பதிவேற்றம்
மத்திய அரசு தேசிய அளவில் அனைத்து வகையான அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களையும் eSHRAM / NDUW என்ற இணையவழி தரவுதளத்தில் 31.12.2021-க்குள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தி உள்ளது. கட்டுமான தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சாலையோர விற்பனையாளர்கள் மற்றும் அனைத்து வகையான அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள், மத்திய அரசு வழங்கும் சிறப்பு சலுகைகள், தொழில் மேம்பட கடன் உதவிகள், விபத்து காப்பீடுகள், மானியங்கள் மூலும் முழுமையாக பயனடைய இந்த இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு ஏற்பாடு
அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆதார் எண்ணை செல்போன் எண்ணுடன் இணைத்து இருந்தால் மட்டுமே இந்த இணையதளத்தில் பதிவு செய்ய முடியும். எனவே தங்கள் பகுதி தபால்காரர்கள் மூலம் தங்கள் செல்போன் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைத்து கொள்ள தூத்துக்குடி தபால் கோட்டம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தபால்காரர்களை அணுக முடியாதவர்கள், அருகில் உள்ள தபால் நிலையத்துக்கு சென்று பயனடையலாம்.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் தபால் நிலையங்களில் செயல்பட்டு வரும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story