மின்சாரம் தாக்கி குரங்கு சாவு
மின்சாரம் தாக்கி குரங்கு சாவு
கூடலூர்
கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஹெல்த் கேம்ப், காசிம்வயல், அப்துல் கலாம் நகர் உள்பட பல்வேறு இடங்களில் குரங்குகள் கூட்டமாக முகாமிட்டு வருகிறது. மேலும் அங்குள்ள கேபிள் வயர்களில் தொங்கியபடி விளையாடுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை கூடலூர் சக்தி விநாயகர் கோவில் பகுதியில் குரங்குகள் கூட்டமாக வந்தது. அப்போது ஒரு மரத்தில் தாவுவதற்கு முயன்ற சமயத்தில் அருகே உள்ள மின்கம்பத்தில் குரங்கு ஒன்று சிக்கியது. தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.
இதேபோல் பல்வேறு இடங்களில் குரங்குகள் தொடர்ந்து உயிரிழக்கும் நிலை காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குரங்குகள் உயிர் இழப்பை தடுக்கும் வகையில் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனத்துக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story