இளம்பெண்ணுக்கு ஆபாச படம்; கிரேன் ஆபரேட்டர் கைது


இளம்பெண்ணுக்கு ஆபாச படம்; கிரேன் ஆபரேட்டர் கைது
x

சமூக வலைத்தளம் மூலம் இளம்பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய கிரேன் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டார்.

ஊட்டி

சமூக வலைத்தளம் மூலம் இளம்பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய கிரேன் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டார்.

ஆபாச படம்

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த திருமணமான ஒரு இளம்பெண்ணை அவரது செல்போன் எண்ணில், திருவண்ணாமலையை சேர்ந்த கிரேன் ஆபரேட்டர் சரவணன் என்பவர் தொடர்பு கொண்டு பேசி அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். மேலும் வாட்ஸ்-அப் செயலி மூலம் ஆபாச புகைப்படத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீசில் அந்த இளம்பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை தேடி வந்தனர். மேலும் தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது.

கைது

இதையடுத்து தனிப்படை போலீசார், திருவண்ணாமலை சென்று தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று சரவணனை போலீசார் கைது செய்து, ஊட்டிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நீலகிரி மாவட்டத்தில் சைபர் கிரைம் மூலம் பண மோசடி, பெண்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் தவறான தகவல்கள் மற்றும் செல்போன்கள் காணாமல் போகுதல் போன்ற புகார்களின் மீது விசாரணை செய்து வழக்கு பதியப்பட்டு வருகிறது. எனவே சமூக வலைத்தள குற்றங்களால் பாதிக்கப்படும் நபர்கள் எவ்வித தயக்கமுமின்றி காவல்துறையை அணுகலாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story