ஆரணி அருேக மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
ஆரணி அருேக மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
ஆரணி
ஆரணியை அடுத்த ஏரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமதாசின் மகன் திருமால் (வயது 28). இவர், சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர், தினமும் கிராமத்தில் இருந்து மோட்டார்ைசக்கிளில் ஆரணிக்கு வந்து, அங்கிருந்து தனியார் நிறுவன பஸ்சில் வேலைக்காக ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்று வருவது வழக்கம்.
அதேபோல் பாளைய ஏகாம்பரநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர், நடுக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு திருமால் வேலைக்குச் செல்ல தனது மோட்டார்சைக்கிளில் ஆரணியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அதேபோல் டாஸ்மாக் கடையில் கணக்குகளை பார்ப்பதற்காக சரவணன் தனது மோட்டார்ைசக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
ஆரணி அருகே முன்னால் சென்ற சரவணனின் மோட்டார்சைக்கிள் மீது பின்னால் வந்த திருமாலின் மோட்டார்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு, டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் திருமால் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். சரவணனுக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான திருமாலுக்கு திருமணம் ஆகவில்லை.
Related Tags :
Next Story