நாட்டறம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதியதில் போலீஸ்காரர் பலி


நாட்டறம்பள்ளி அருகே  லாரி மீது கார் மோதியதில் போலீஸ்காரர் பலி
x
தினத்தந்தி 24 Oct 2021 7:44 PM IST (Updated: 24 Oct 2021 7:44 PM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அருகே முன்னால் சென்ற லாரி மீது சொகுசு கார் மோதியதில் போலீஸ்காரர் பலியானார். காரில் பயணம் செய்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே முன்னால் சென்ற லாரி மீது சொகுசு கார் மோதியதில் போலீஸ்காரர் பலியானார். காரில் பயணம் செய்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

உறவினர் நிச்சயத்தார்த்த நிகழ்ச்சி

வேலூரை அடுத்த கணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரின் மகன் சுரேஷ்குமார் (வயது 37). இவர், 2003-ம் ஆண்டு வேலூரில் போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். பின்னர் சென்னை மாநகர சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வந்தார். இவர், கண் அறுவை சிகிச்சைக்காக மருத்துவ விடுப்பில் இருந்தார். 
இந்த நிலையில் ஈரோட்டில் உள்ள உறவினர் நிச்சயத்தார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக போலீஸ்காரர் சுரேஷ்குமார், சாத்துமதுரையைச் சேர்ந்த பிச்சாண்டியின் மகன் முனிசாமி (27), கணியம்பாடியைச் சேர்ந்த ஜெகநாதனின் மகன் ஜெயபிரகாஷ் (21), வேலூர் பாகாயம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலையின் மகன் முருகேசன் (53) ஆகியோர் நேற்று காலை ஒரு சொகுசு காரில் புறப்பட்டு சென்றனர்.

காரை, முருகேசன் ஓட்டினார். காரின் முன் பக்க இருக்கையில் போலீஸ்காரர் சுரேஷ்குமார் அமர்ந்திருந்தார். மற்றவர்கள் பின் பக்க இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

லாரி மீது மோதல்

கார், வாணியம்பாடிைய கடந்து கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கேத்தாண்டப்பட்டி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென அந்த கார் முன்னால் சென்ற ஒரு லாரியின் பின்பக்கம் மீது சொகுசு கார் மீது பயரங்கரமாக மோதியது. கார் சென்ற வேகத்்தில் லாரிக்குள் புகுந்து விட்டது. இந்த பயங்கர விபத்தில் காரில் பயணம் செய்த போலீஸ்காரர் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

விபத்தை ேநரில் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் விரைந்து வந்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதில் போலீஸ்காரர் சுரேஷ்குமார் வழியிேலயே இறந்து விட்டார். மற்ற 3 பேரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தை நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் பார்வையிட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பம்
இறந்த போலீஸ்காரர் சுரேஷ்குமாருக்கு சத்தியலட்சுமி (வயது 35) என்ற மனைவியும், சத்தியசாத் (வயது 6) என்ற மகனும், அனுவர்ஷனி (4) என்ற மகளும் உள்ளனர்.

Next Story