தீபாவளி பண்டிகையை பொருட்கள் வாங்க திருப்பூர் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.


தீபாவளி பண்டிகையை பொருட்கள் வாங்க  திருப்பூர் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
x
தினத்தந்தி 24 Oct 2021 8:52 PM IST (Updated: 24 Oct 2021 8:52 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை பொருட்கள் வாங்க திருப்பூர் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

திருப்பூர், 
தீபாவளி பண்டிகையை பொருட்கள் வாங்க  திருப்பூர் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. 
களை கட்டிய கடைவீதிகள்
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் திருப்பூர் கடை வீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் களை கட்டியது. தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் நேற்றுமுன்தினம் முதல் பனியன் நிறுவனங்களில் போனஸ் பட்டுவாடா தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நேற்று தொழிலாளர்கள் குடும்பத்துடன் கடைவீதியை நோக்கி படையெடுத்தனர். இதன்காரணமாக திருப்பூர் புதுமார்க்கெட் வீதி, மாநகராட்சி சந்திப்பு, குமரன் ரோடு பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
ஜவுளிக்கடைகளில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதல் கடைவீதிகள் களை கட்ட தொடங்கின. குடும்பத்துடன் வந்து பொருட்களை வாங்கி சென்றார்கள். புதுமார்க்கெட் வீதியில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக காணப்பட்டது. மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி ஜேப்படி ஆசாமிகள் கைவரிசை காட்டுவார்கள் என்பதால் போலீசார் மப்டியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கண்காணிப்பு கோபுரங்கள்
மக்கள் அதிகம் கூடும் புதுமார்க்கெட் வீதி, மாநகராட்சி சந்திப்பு, குமரன் சாலை, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் காவல்துறை மூலமாக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டபோதிலும் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவில்லை.
அதுபோல் ரெயில் நிலையம் முன்புறமும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காதர்பேட்டை பனியன் கடைகளுக்கு அதிகம் பேர் வந்து பனியன்களை வாங்கி சென்றனர். நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு முன்பு சாலையோர கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கடைகளிலும், பனியன் கடைகளிலும் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து உடுமலை,தாராபுரம்,பல்லடம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆண்களும், பெண்களுக்கும், இளைஞர்களும் போட்டி போட்டு ஆடைகளை தேர்வு செய்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகர கடை வீதிகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

Next Story