உடுமலை பகுதி கிராமங்களில் நீர்வழித்தடங்களை அதிகாரிகள் ஆய்வு


உடுமலை பகுதி கிராமங்களில் நீர்வழித்தடங்களை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 24 Oct 2021 9:02 PM IST (Updated: 24 Oct 2021 9:02 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை பகுதி கிராமங்களில் நீர்வழித்தடங்களை அதிகாரிகள் ஆய்வு

தளி, 
பருவமழை தீவிரம் அடையும் முன்பு உடுமலை பகுதி கிராமங்களில் நீர்வழித்தடங்களை அதிகாரிகள் ஆய்வு  செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கனமழை
உடுமலை, தளி அமராவதி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர் வழித்தடங்கள், ஓடைகள் தாழ்வான பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தரைமட்ட பாலங்கள் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி உள்ளிட்ட மண்ணில் படர்ந்து உள்ள  பயிர்கள் சேதத்திற்கு உள்ளாகி வருகிறது. அத்துடன் கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்து வருகிறது. 
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரால்  கொசு உற்பத்தியும் அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது. கழிவுநீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படாதது. 
நீர் வழித்தடங்கள் ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கவனம் செலுத்தாதது. மழைநீர் வடிகால் முறையாக ஏற்படுத்தப்படாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி வருகிறது. 
ஆய்வு  செய்ய வேண்டும்
இன்னமும் ஒரு சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய உள்ளது.அதற்கு முன்பாக அதிகாரிகள் அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்று ஆய்வு செய்ய வேண்டும். குடியிருப்புகளில் தண்ணீர் தேங்காதவாறு தடுப்பதற்கு மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.

Next Story