சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
உடுமலை
உடுமலை பழனியாண்டவர் நகரில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் சித்தி விநாயகர், பாலமுருகன், துர்க்கையம்மன், நவகிரகங்கள் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 22-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று காலை மங்கள இசை, 2-ம் கால யாக பூஜை, மூலமந்திரம் ஹோமம், சுவாமிக்கு காப்புக்கட்டுதல், நாடி சந்தானம், திரவியாகுதி, பூர்ணாகுதி, மகாதீபாராதனை,யாத்ரா தானம்,கலசம் புறப்பாடு, கோபுர கலசம் மகாகும்பாபிஷேகம் நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் விநாயகருக்கு மகாஅபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை கோ தரிசனம் நிகழ்ச்சிகள் நடந்தது. மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். அதை தொடர்ந்து அன்னதானம் நடந்தது.
மகாகும்பாபிஷேகம்விழாவிற்கான ஏற்பாடுகளை சித்தி விநாயகர் கோவில் தலைவர் என்.ரவிச்சந்திரன், செயலாளர் ஏ.ஈஸ்வரன், பொருளாளர் எம்.குணசேகரன் மற்றும் கே.சண்முகம், சி.வெங்கிடுசாமி உள்ளிட்ட பக்த பிரமுகர்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story