மாவட்டங்களுக்கு இடையேயான ஆக்கி விளையாட்டு போட்டி
மாவட்டங்களுக்கு இடையேயான ஆக்கி விளையாட்டு போட்டி
உடுமலை,
மாநில அளவில், மாவட்டங்களுக்கு இடையேயான ஆக்கி விளையாட்டு போட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை கோவில்பட்டியில் நடைபெற உள்ளது. இதற்காக மாவட்ட அணிகளுக்கு ஆக்கி விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அதன்படி திருப்பூர் மாவட்ட ஆக்கி அணி சார்பில் விளையாடுவதற்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான ஆக்கி விளையாட்டு, உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது.
இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த ஆக்கி விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டு வீரர்கள் தேர்வை திருப்பூர் மாவட்ட ஆக்கி விளையாட்டு சங்க செயலாளர் மோகன்குமார், தேர்வு குழுவைச்சேர்ந்த உடுமலை அருண்குமார், பாலு, திருப்பூர் ராஜாராம் ஆகியோர் நடத்தினர். இதில் 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story