நிலக்கோட்டை அருகே உயிருக்கு போராடிய மயிலை காப்பாற்றிய இளைஞர்கள்


நிலக்கோட்டை அருகே உயிருக்கு போராடிய மயிலை காப்பாற்றிய இளைஞர்கள்
x
தினத்தந்தி 24 Oct 2021 9:21 PM IST (Updated: 24 Oct 2021 9:21 PM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை அருகே உயிருக்கு போராடிய மயிலை இளைஞர்கள் காப்பாற்றினர்.

நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே நூத்துலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்.தும்மலப்பட்டியை ஒட்டிய காட்டுப்பகுதியில் ஆண் மயில் ஒன்று மரத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தது. இதனால் அந்த மயில் பறக்கமுடியாமல் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. 
இதை பார்த்த நூத்துலாபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முனீஸ்வரன், வார்டு உறுப்பினர் சுந்தரபாண்டி மற்றும் இளைஞர்கள், உயிருக்கு போராடிய மயிலை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அந்த மருத்துவமனை பூட்டிக்கிடந்தது. 
பின்னர் அந்த மயிலை நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி ஆகியோரிடம் இளைஞர்கள் ஒப்படைத்தனர். அவர்கள் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அதன்படி நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், காயமடைந்த மயிலுக்கு சிகிச்சை அளித்தனர். மயிலை காப்பாற்றிய இளைஞர்களை போலீசார் பாராட்டினர். 

Next Story