பிரதம மந்திரி குடியிருப்பு,பசுமை வீடு திட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கு 15 சதவீதம் ஒதுக்கீடு
சிறுபான்மையின மக்களுக்கு 15 சதவீதம் ஒதுக்கீடு
வேலூர்
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்) மற்றும் பசுமை வீடு திட்டங்களின்கீழ் தகுதியுள்ள ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் மற்றும் குடியிருப்புகள் கட்டி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு கட்டப்படும் குடியிருப்புகளில் மொத்த ஒதுக்கீட்டில் 15 சதவீதம் குடியிருப்புகள் முஸ்லிம்கள், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த, ஜைன, பார்சி ஆகிய சிறுபான்மையின மக்களுக்கு தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
எனவே வேலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் மற்றும் பசுமை வீடு கட்டும் திட்டத்தின்கீழ் 15 சதவீத ஒதுக்கீட்டை சிறுபான்மையின மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம்.
இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story