ெரயிலில் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ெரயிலில் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 24 Oct 2021 10:21 PM IST (Updated: 24 Oct 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

ெரயிலில் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வாலாஜா

வாலாஜாரோடு ெரயில் நிலையம் வழியாக செல்லும் ரெயில்களில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறப்பு பறக்கும் படை வட்டாட்சியர் இளஞ்செழியன் மற்றும் ெரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

சென்னை சென்ட்ரல் ெரயில் நிலையத்தில் இருந்து காட்பாடியை நோக்கி வந்த ஒரு ரெயில் வாலாஜாரோடு ரெயில் நிலையத்தில் வந்து நின்றது. அதில் அதிகாரிகள் ஏறி சோதனை செய்தனர். ஒரு பெட்டியில் பயணிகளின் இருக்கைகளுக்கு அடியில் கேட்பாரற்றுக் கிடந்த கிடந்த மூட்டைகளை பிரித்துப் பார்த்தபோது, ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரிந்தது. ஒரு டன் எடையிலான ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வாலாஜாவில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

Next Story