தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 Oct 2021 10:24 PM IST (Updated: 24 Oct 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்த செய்திகள் வருமாறு:-

சுடுகாடு கட்டுமான பணி நிறைவு பெறுமா? 

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவில் உள்ள பாரதி மூலங்குடி ஊராட்சியில் சுடுகாடு கட்டப்பட்டது. இந்த சுடுகாட்டு கட்டுமான பணிகள் நிறைவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இறந்தவர்களின் உடலை மழையிலும், வெயிலும் திறந்தவெளியில் வைத்து எரிக்கும் அவல நிலை உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுடுகாடு கட்டுமான பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                                                         -ஆனஸ்ட்ராஜ், பாரதி மூலங்குடி.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தாண்டவன்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன.மேலும், மின்கம்பிகளை மரக்கிளைகள் மற்றும் செடி, கொடிகள் சூழ்ந்து உள்ளன. இதனால் காற்று வீசும் போது மின்கம்பிகள், மரக்கிளைகளுடன் உரசுவதால் அடிக்கடி தீப்பொறிகள் வெளிவருகின்றனர். இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு விடுமோ? என அந்த பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                            
                                                                                             -பொதுமக்கள், தாண்டவன்குளம்.

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பொதக்குடி-லெட்சுமாங்குடி சாலையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நிலையில் மேற்கண்ட சாலையில் இரவு நேரங்களில் அதிகளவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன.இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.மேலும், மாடுகள் சாலையில் அங்கும், இங்கும் ஓடி திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.எனவே, உயிர்பலி எதுவும் ஏற்படும் முன்பு சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                             
                                                                                                                      -அராபாத், திருவாரூர்.

Next Story