சிப்காட் அருகே மகனுக்கு திருமணமாகாத வேதனையில் தாய் தீக்குளித்து தற்கொலை


சிப்காட் அருகே  மகனுக்கு திருமணமாகாத வேதனையில்  தாய் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 24 Oct 2021 10:28 PM IST (Updated: 24 Oct 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

மகனுக்கு திருமணமாகாத வேதனையில் தாய் தீக்குளித்து தற்கொலை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகில் உள்ள லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வள்ளி (வயது 47). இவர் தனது கணவர், மகன், மகளுடன் வசித்து வந்தார். இவரின் மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்த வள்ளி தனது மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லைேய என, மகளிடம் சொல்லி வேதனைப்பட்டு வந்தார்.

வள்ளி 18-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது, தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீக்காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று வள்ளி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்ற மனவேதனையில் இருந்து வந்த தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story