மோட்டார் சைக்கிள் திருடிய சகோதரர்கள் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய சகோதரர்கள் கைது
x

மோட்டார் சைக்கிள் திருடிய சகோதரர்கள் கைது செய்யப்பட்டனா்.

அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி மகன் ஏகாம்பரம் (வயது 27).  இவர் கடந்த 21-ந்தேதி தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை  மர்ம மனிதர் திருடி சென்றுவிட்டார். 

இதுகுறித்து அவர் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், திருவெண்ணெய்நல்லூர்  துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குருபரன் மற்றும் போலீசார் பேரங்கியூர் - பைத்தாம்பாடி செல்லும் கூட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

 அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் 2 பேர்  வேகமாக வந்தனர். அவர்களை மறித்து போலீசார் விசாரித்தனர். அதில்  வானூர் தாலுகா ஆண்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன்கள் கிருஷ்ணமூர்த்தி (27) வெற்றிவேல் (29)  என்பதும்,அவர்கள்  ஓட்டிவந்த 2 மோட்டார் சைக்கிளும் திருடி வந்தது என்பதும், அதில் ஒரு மோட்டார் சைக்கிள் ஏகாம்பரத்துக்கு சொந்தமானது என்பது  தெரியவந்தது.

இதையடுத்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

Next Story