மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது.
திருப்புவனம்,
திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்தது வில்லியாரேந்தல் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது38). இவர் வில்லியாரேந்தலில் இருந்து திருப்பு வனத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். நான்கு வழிச் சாலையை கடக்க முயன்றபோது மதுரையில் இருந்து முதுகுளத்தூர் நோக்கி சென்ற அரசு புறநகர் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மோதிய வேகத்தில் பஸ் மோட்டார் சைக்கிளை இழுத்துச் சென்று சாலைஓரத்தில் இறங்கி நின்றது. இந்த மோதலில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளது. மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஹரிகிருஷ்ணன் படுகாயம் அடைந்து திருப்புவனம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். கிரேன் கொண்டு வந்து அரசு பஸ்சை மீட்டனர். விபத்து குறித்து திருப்புவனம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story