தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு திருக்கோவிலூர் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை
தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், திருக்கோவிலூர் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளனர்
திருக்கோவிலூர்
தண்ணீர் வரத்து அதிகரிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் மதகுகள் பராமரிக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் அணையில் இருந்து குறிப்பிட்ட அளவு த ண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திருக்கோவிலூர் பகுதியில் தொடர்ந்து மழையும் பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே உள்ள கால்வாயில் இருந்து ஆற்றுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. எனவே தென்பெண்ணை ஆற்றில் தற்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் திருக்கோவிலூரில் ஆற்றின் நடுவே உள்ள கபிலர் குன்றுவை தழுவியபடி தண்ணீர் செல்கிறது.
போக்குவரத்துக்கு தடை
இதற்கிடையே அரகண்டநல்லூர் - திருக்கோவிலூரை இணைக்கும் வகையில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்தபகுதியில் போக்குவரத்துக்கு போலீசார் தடைவிதித்துள்ளனர். மேலும் ஆற்றில் தண்ணீர் வரத்து காரணமாக, திருக்கோவிலூர் பெரிய ஏரிக்கும் அதிகளவில் தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. இதனால் ஏரியும் நிரம்பும் நிலையில் இருக்கிறது.
தொடர் மழை காரணமாக திருக்கோவிலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story