தெப்பக்குளத்தில் மூழ்கி வக்கீல் பலி


தெப்பக்குளத்தில் மூழ்கி வக்கீல் பலி
x
தினத்தந்தி 24 Oct 2021 10:58 PM IST (Updated: 24 Oct 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

தெப்பக்குளத்தில் மூழ்கி வக்கீல் பலியானார்.

திருப்புவனம், 
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தாலுகா திருமழிசை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது23). வக்கீலான இவர் திருப்புவனம் வந்து தனது நண்பர்களுடன் திருப்புவனம் அல்லிநகரம் தெப்பக்குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது தண்ணீரில் மூழ்கி உள்ளார். நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துச்செல்வம் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

Next Story