இடி விழுந்து படகு சேதம்


இடி விழுந்து படகு சேதம்
x
தினத்தந்தி 24 Oct 2021 11:17 PM IST (Updated: 24 Oct 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.மங்கலம் அருகே இடி விழுந்து படகு சேதமானது.

ஆர்.எஸ்.மங்கலம், 
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி காந்தி நகரைச் சேர்ந்த மீனவர் மலைசிங்கம் இவர் தனது பைபர் படகை திருப்பாலைக்குடி கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்தார். அந்த பகுதியில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மலைசிங்கம் படகின் மீது இடி விழுந்து படகு சேதமடைந்தது. தகவல் அறிந்த ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் முருகவேல், சோழந்தூர் வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன், திருப்பாலைக்குடி கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் ஆகியோர் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story