மின் தடை அறிவிப்பு
ராமநாதபுரம், மண்டபம், திருவாடானை, கமுதி பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம், மண்டபம், திருவாடானை, கமுதி பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை
ராமநாதபுரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்டு உள்ள மின் தடை பற்றிய அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் நகருக்கு செல்லும் 1-வது மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இந்த மின் பாதை வழியாக மின் வினியோகம் செய்யப்படும்.
இதையடுத்து சக்கரக்கோட்டை, சின்னக்கடை, புளிக் காரத்தெரு, பழைய மற்றும் புதிய பஸ் நிலைய பகுதிகள், கேணிக்கரை, வண்டிக் காரத்தெரு, தங்கப்பா நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இதே போல ஊரக பகுதிகளுக்கான மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நிசாக் ராஜா வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறி இருப்பதாவது:- மண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால், மறவர் தெரு, ஏ.கே.எஸ். தோப்பு, காந்திநகர், மீனவர் காலனி மற்றும் பாம்பன் முதல் அக்காள் மடம் வரை, மண்டபம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், வேதாளை, சுந்தரமடையான், சமத்துவபுரம், அகதிகள் முகாம், சீனியப்பா தர்கா, சாத்தக் கோன்வலசை பகுதிகளிலும் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
திருவாடானை
திருவாடானை மற்றும் நகரிகாத்தான் துணை மின்நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் (நாளை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும்.
இதனால் ஓரியூர், புதுவயல், வெள்ளையபுரம், பதனக்குடி, சிறு கம்பையூர், என்.மங்களம், அடுத்தகுடி, ஆண்டாவூரணி, மணலூர், பேராமங்கலம், பாகனூர், கிடங்கூர், பெருவாக் கோட்டை, மங்கலக்குடி, அறிவித்தி, கூகுடி, அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், சுப்பிரமணியபுரம், நகரிகாத்தான், கட்டிவயல், பாண்டுகுடி, டி.கிளியூர், வாணியேந்தல், திருவாடானை, தோட்டாமங்கலம், பாரதிநகர், சி.கே. மங்களம், அரசூர், முப்பையூர், திருவேகம்பத்தூர், பாரூர், கருமொழி, புளியால், அதங்குடி, நெய்வயல், ஓரிக்கோட்டை, டி.நாகனி, இளங்குன்றம், சேந்தனி, அழகமடை, செலுகை, கற்காத்தகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்றும் திருவாடானை மின் வாரிய உதவி செயற் பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
கமுதி
கமுதி உதவி மின் செயற்பொறியாளர் கூறியதாவது:- கமுதி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பேரையூர் பீடரில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சுற்று வட்டாரங்களான உலகநடை, ஜெகநாதபுரம், கருங்குளம், பாக்குவெட்டி, மருதங்கநல்லூர், பேரையூர், சாமிபட்டி, மேட்டுபட்டி, செங்கோட்டைபட்டி, புல்வாய்குளம், இலந்தை குளம் உள்ளிட்ட இடங்களில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story