அதிவிரைவு படையினருக்கு துப்பாக்கிகளை கையாளுதல் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஐ.ஜி. வழங்கினார்


அதிவிரைவு படையினருக்கு துப்பாக்கிகளை கையாளுதல் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஐ.ஜி. வழங்கினார்
x
தினத்தந்தி 24 Oct 2021 6:03 PM GMT (Updated: 24 Oct 2021 6:03 PM GMT)

அதிவிரைவு படையினருக்கு துப்பாக்கிகளை கையாளுதல் போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் அதிவிரைவுபடையினருக்கு துப்பாக்கிகளை கையாளுதல் தொடர்பாக போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.யின் 2 அதிவிரைவுப்படை, டி.ஐ.ஜி.யின் 2 அதிவிரைவுப்படை, திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அதிவிரைவுப்படை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அதிவிரைவுப்படை ஆகிய 6 அதிவிரைவுபடையினர் கலந்து கொண்டனர். இதில் ஏ.கே. 47, எஸ்.எல்.ஆர்., ஐ.என்.எஸ்.ஏ.எஸ். மற்றும் 9 எம். பிஸ்டல் ஆகிய துப்பாக்கிகளை அதிவிரைவுபடையினர் கையாண்டனர். இதில் ஏ.கே.47- துப்பாக்கியை கையாளுதலில் முதல் மற்றும் 2-ம் பரிசினை டி.ஐ.ஜி.யின் 2 அதிவிரைவுப்படையினரும், எஸ்.எல்.ஆரில் முதல் பரிசு புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அதிவிரைவுப்படையினரும், 2-ம் பரிசினை ஐ.ஜி.யின் அதிவிரைவுப்படையினரும், ஐ.என்.எஸ்.ஏ.எஸ்-ல் முதல் மற்றும் 2-ம் பரிசினை டி.ஐ.ஜி.யின் 2 அதிவிரைவுப்படையினரும், 9 எம்.எம். பிஸ்டல் முதல் பரிசினை டி.ஐ.ஜி.யின் அதிவிரைவுப்படை-1, 2-ம் பரிசினை ஐ.ஜி.யின் 2 அதிவிரைவுப்படையினர் பெற்றனர். பரிசுகளை மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வழங்கி பாராட்டினார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகராஜ் மற்றும் ஆயுதப்படையினர் செய்திருந்தனர்.

Next Story