லாரி, காரில் கடத்தி வரப்பட்ட ரூ.11¼ லட்சம் குட்கா பறிமுதல்-3 பேர் கைது
கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓசூர் வழியாக லாரி, காரில் கடத்தி வரப்பட்ட ரூ.11¼ லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திகிரி:
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரட்சகநாதன் தலைமையிலான போலீசார் பழைய ஆனைக்கல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது லாரியில் மூட்டை, மூட்டையாக குட்கா இருப்பது தெரிந்தது. இதையடுத்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் புதுக்கோட்டை மாவட்டம் சுந்தன்பட்டியை சேர்ந்த தேவதாசன் (வயது40) என்பதும், கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்கா கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.10 லட்சம் மதிப்பிலான 2½ டன் குட்காவுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். குட்கா கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 பேர் கைது
இதேபோன்று ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 1,20 ஆயிரம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா இருந்தது.
அதனைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் இருந்து குட்கா கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக சேலத்தை சேர்ந்த குரு, முத்துவேல் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து குட்கா, கார் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story