விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை


விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 24 Oct 2021 11:56 PM IST (Updated: 24 Oct 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

ஆலங்குளம், 
ஆலங்குளம், ராசாப்பட்டி, அண்ணாநகர், இருளப்ப நகர், தேவர் நகர், பெரியார்நகர், கண்மாய்பட்டி சூர்யாநகர், சுண்டங்குளம், ஏ. லட்சுமிபுரம், கீழாண்மறைநாடு, கல்லமநாயக்கர்பட்டி, மாதாங்கோவில்பட்டி, உப்பு பட்டி, எதிர்கோட்டை, காக்கிவாடன்பட்டி, எட்டக்காபட்டி, இ.டி.ரெட்டியபட்டி, குண்டாயிருப்பு, முத்துச்சாமிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் அரசின் விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

Next Story