தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 25 Oct 2021 12:04 AM IST (Updated: 25 Oct 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு அருகே உள்ள சேதுநாராயணபுரம் காளியம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த மாரிமுத்து (வயது 38) என்பவருக்கும், அதே ஊரை சேர்ந்த மஞ்சுளா (26) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில்  மஞ்சுளா குடும்ப பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வத்திராயிருப்பு போலீசார், மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து  வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகாசி சப்-கலெக்டர் தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்.  

Next Story