விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை
ஏற்கனவே அறிவித்த படி விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
ஏற்கனவே அறிவித்த படி விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல் மருத்துவக்கல்லூரி
விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்காக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. பொது மருத்துவ கல்லூரி தொடங்கப்படாத நிலையில் பல் மருத்துவக்கல்லூரிக்கு இந்திய மருத்துவக்குழுமம்அனுமதி மறுத்த நிலையில் பல் மருத்துவக்கல்லூரி தொடக்க பணிகள் முடங்கியது.
கல்லூரி திட்டப்பணி தொடங்கப்பட்ட நிலையில் கடந்தாண்டு இறுதியில் பல் மருத்துவக்கல்லூரிக்கான இடம் தேர்வு செய்ய சென்னை பல் மருத்துவக்கல்லூரி முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினரும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொது மருத்துவக் கல்லூரி வளாகத்திற்கு அருகில் 8 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு அதற்கான அறிவிப்பு பலகை யும் வைக்கப்பட்டது. மேலும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பல்மருத்துவ கல்லூரி வளாகம் என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.
அறிவிப்பு பலகை
இந்நிலையில் பொது மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் முடிவடைந்து நடப்பாண்டிலேயே 150 மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான பணிகள் முடக்கம் அடைந்துள்ளது.
மேலும் பல் மருத்துவக்கல்லூரிக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புபலகையும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பல் மருத்துவக்கல்லூரி அறிவிப்பு பலகையும்அகற்றப்பட்டுள்ளது. இதனால் பல் மருத்துவக்கல்லூரி தொடக்க பணி முற்றிலுமாக முடங்கி விட்டதாக கூறப்படுகிறது. எனவே தமிழக அரசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story