அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு


அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 25 Oct 2021 12:23 AM IST (Updated: 25 Oct 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிகளை பாராட்டினர்.

தாயில்பட்டி, 
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் விருதுநகர் மாவட்டம் சார்பாக வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள், மற்றும் கலப்பு ஆகிய 3 பிரிவில் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மாரியப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிசங்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தன், உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமரேசன், ஆசிரியர், ஆசிரியைகள் ஆகியோர் பாராட்டினர். 

Next Story