ஜவுளிக்கடையில் புடவை- லுங்கிகளை திருடிய பெண்கள் உள்பட 5 பேர் கைது
ஜவுளிக்கடையில் புடவை- லுங்கிகளை திருடிய பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வி.கைகாட்டி:
புடவை- லுங்கிகள் திருட்டு
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் தேளூர்-ஜெயங்கொண்டம் சாலையை சேர்ந்தவர் ஆடலரசன்(வயது 43). இவர் அப்பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த ஜவுளிக்கடைக்கு வந்த 4 பெண்கள் உள்பட 5 பேர் வந்தனர்.
அவர்கள் ஜவுளி எடுப்பதுபோல் நடித்து 8 புடவைகள் மற்றும் லுங்கிகளை திருடி மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட ஜவுளிக்கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் ஆடலரசன் ஆகியோர் சேர்ந்து 5 பேரையும் பிடித்து கயர்லாபாத் போலீசில் ஒப்படைத்தனர்.
5 பேர் கைது
இது குறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் ஜெயங்கொண்டத்தை அடுத்த தண்டலை கிராமத்தை சேர்ந்த அருமைராஜின் மனைவி கற்பகம்(40), ரமேசின் மனைவி கல்பனா(35), செல்வத்தின் மனைவி லலிதா(50), ராமசாமியின் மனைவி அலமேலு(70), சிதம்பரம் மகன் சங்கர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story