தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
குப்பைத்தொட்டி வேண்டும்
தஞ்சை மானம்புச்சாவடி பகுதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில் சன்னதி தெருவில் குப்பைத்தொட்டி வசதி இல்லை. இதன் காரணமாக பொதுமக்கள் குப்பைகளை சாலையோரத்தில் குவித்து வைத்துள்ளனர். இந்த குப்பைகள் அகற்றப்படாததால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும், குப்பைகளை தேடி கால்நடைகள் குவியத்தொடங்கி உள்ளன. இதனால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெங்கடேச பெருமாள் கோவில் சன்னதி தெருவில் குப்பைத்தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-ஆனந்த், தஞ்சாவூர்.
தெருவிளக்கு ஒளிருமா?
தஞ்சை மானம்புச்சாவடி பகுதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில் சன்னதி தெருவில் பொதுமக்கள் வசதிக்காக தெருவிளக்கு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது பராமரிப்பின்றி தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் இரவு நேரங்களில் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.மேலும், வாகன ஓட்டிகளும் அடிக்கடி விபத்துகளில் சிக்கிகொள்கின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்கு ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், தஞ்சாவூர்.
குப்பைகள் அகற்றப்படுமா?
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன் வாடி சந்திப்பில் இருந்து அரசு மருத்துமனைக்கு செல்லும் சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.மேலும், தேங்கி கிடக்கும் குப்பைகளை பன்றிகள் மற்றும் கால்நடைகள் சாலையில் இழுத்து போட்டு செல்கின்றன.இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர்.அதுமட்டுமின்றி, சிதறிக்கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றவும், குப்பைத்தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், அதிராம்பட்டினம்.
சாலையின் நடுவே பள்ளம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவில் உள்ள அதிராம்பட்டினம் மீன் மார்க்கெட் செல்லும் சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.மேலும், சாலையின் நடுவே ஆபத்தான பள்ளம் ஒன்று உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் சாலையின் நடுவே ஆபத்தான பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர்.எனவே, உயிர்பலி எதுவும் ஏற்படும் முன்பு சாலையின் நடுவே உள்ள ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அடதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தபகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பக்ருதீன், அதிராம்பட்டினம்.
ஆபத்தான மின்கம்பம்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த நாச்சியார்கோவில் பகுதியில் உள்ள ஏனநல்லூர் அய்யனார்கோவில் தெருவில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தையொட்டி குடிசை வீடு உள்ளது. அதுமட்டுமின்றி மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.இதனால் மின்கம்பம் குடிசை மீது விழுந்து விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு குடிசை வீட்டின் முன்பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்-
-கவிதா, திருவிடைமருதூர்.
Related Tags :
Next Story