கருவாடு காயவைக்கும் தொழில் பாதிப்பு


கருவாடு காயவைக்கும் தொழில் பாதிப்பு
x
தினத்தந்தி 25 Oct 2021 1:35 AM IST (Updated: 25 Oct 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

சேதுபாவாசத்திரம் பகுதியில் தொடர் மழையால் கருவாடு காயவைக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் 500-க்கும் மேற்பட்டோர் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

சேதுபாவாசத்திரம்:
சேதுபாவாசத்திரம் பகுதியில் தொடர் மழையால் கருவாடு காயவைக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் 500-க்கும் மேற்பட்டோர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். 
கருவாடு விற்பனை 
தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு, மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மந்திரிபட்டினம், செம்பியன்மாதேவிபட்டினம் உள்பட 34 மீனவ கிராமங்களில்  4 ஆயிரத்து 500 நாட்டுப்படகு மீனவர்களும், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில்  134 விசைப்படகு மீனவர்களும் மீன்பிடிதொழில் செய்து வருகி்ன்றனர். இந்த படகுகளில் அன்றாடம் வரக்கூடிய இறால், நண்டு, மீன், கணவாய் போன்றவற்றை மீனவர்கள் விற்பனை ெசய்து, பின்னர் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகின்றனர்.  இதில் கழிவாக கூடிய மீன்களையும், சங்காயம் எனப்படும் சிறிய வகை மீன்களையும் வாங்கி துறைமுகங்களிலேயே காயவைத்து கருவாடு விற்பனை தொழிலும் செய்துவருகின்றனர். 
கோழி தீவனத்திற்காக 
உணவிற்கு பயன்படும் கருவாடுகளைவிட கோழிகளுக்கு தீவனமாக பயன்படும் சிறியவகை சங்காய வகை மீன்களுக்கு பெரும் வரவேற்புள்ளது. இவ்வகை மீன்களை மொத்தமாக வாங்கி காயவைத்து கிலோ 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த கருவாடுகள் அனைத்தும் நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு கோழி தீவனத்திற்காக அனுப்பப்படுகிறது. மல்லிப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய துறைமுகங்களில் மட்டும் கருவாடுகளை தரம்பிரிக்க, காயவைக்க, சாக்குமூட்டைகளில் கட்டி லாரிகளில் ஏற்றுவதற்கு என தினமும்  500- க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக இந்த பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் கருவாடு காயவைக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் 500- க்கும் மேற்பட்டோர் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

Next Story